Sunday, January 31, 2010

புரிந்துகொள்ள மாட்டார்களா?

இஷா தொழுகைக்காக கிருங்காடெனிய பள்ளிவாயலுக்கு சென்றிருந்தேன். தொழுது முடிந்த பின் கூட்டு ஓதுவது வழக்கம். இன்று திடீரென லா இலாஹா கலிமாவை தலை அசைத்துக்கொண்டு முனங்கினார்கள். அத்ட்கு ஆமா போடும் எமது சகோதரர்கள் சேந்து தலை ஆட்டுவார்கள். இதை ஏதட்காக செய்கிறீர்கள் என்று கேட்டாள். சம்பிரதாயம் என்று சொல்லுவார்கள். பின்னால் உள்ளவர்களை கேட்டாள், அவர் ஏதோ தலை அசைக்கிறார் நாமும் அசைக்கிறோம் என்பார்கள்.

கிரித்தவர்கள் மாற்று மதத்தினர் தமது பாதிரிமார்கள் பெரியார்கள் எதை சொல்லுவார்களோ அதை எந்த வித ஆய்வுமின்றி கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மற்றைய மதத்திலிருந்து வேறுபட்டு காண்கிறோம். ஒரு உன்மயான முஸ்லிம் தனது மார்க்கத்தில் ஏதாவது ஒன்றை செய்வதாயிருந்தால் அல்லஹவும் அவனது இறுதி தூதர் அவர்களும் காட்டி தந்த வழியிலே செய்வார்கள். ஆனால் இன்று சில சகோதரர்கள் தாம் விரும்பியவாறு இசிலாதை அமைத்துக்கொள்ள முனைக்கிறார்கள்.

எமது சகோதரர்கள் இதை புரிந்து நடக்க வேண்டும். கவலைக்குரிய விடயம் என்னவென்றால். இதை கேட்பவர்களை குழப்பவாதிகள் என்று சொல்லுகிறார்கள்.

ரெஜிபோம் பத்தியெரிந்ததால் மாவனல்லை நகரில் பீதி

மாவனல்லை கண்டி பஸ்தரிப்பிடத்திற்கு அருகாமையில் ரயீஸ் என்பவரின் கடைக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த அழுகிய பழங்களைக் குடிகாரக் கும்பல் ஒன்றின் மூலம் பத்தவைக்கப்பட்டது. இதனால் பீதியடைநத மக்கள் வெள்ளம் அவ்விடத்தை விரைந்தது. இந்த நடவடிக்கையில் பிரதம தலைவராக கித்சிரி சன்டி அவர்களும் கலந்து சிறப்பித்தார். அவர் குடித்திருந்த காரணத்தினால் மக்களுக்கும் அங்கிருந்த குடிகாரக் கும்பளுக்கும் ஏசிவிட்டு சென்றார். அவ்விடத்தை விரைவாக வந்தடைந்த பொலிஸ் அதிகாரிகளும் அவரின் ஏச்சிக்கு ஆலானார்கள் பாவம். மேலும் எங்கள் பிரதேச சபை தலைவர் அந்த இடத்தில் இருந்த வடைக்கரத்தை வைத்திருக்கும் முஸ்லிம் சகோருக்கு ஏசி அவரின் வேலைதான் இது என்று அவரைக் குற்றஞ்சாட்டிவிட்டுச் சென்றார்.

அனைவருக்கும் சுப அனாகதயக்.....

ஜயவேவா!!!!!!!!!!!!!!

Wednesday, January 27, 2010

கல்லான் வத்தையில் இடம்பெற்ற அசம்பாவிதம்

நேற்று (26.01.2010) இரவு கல்லான் வத்தையில் இரு அரசியல் கட்சியினருக்கு மத்தியில் ஒரு மோதல் இடம்பெற்றது. இதன் போது மாவனல்லை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக (இரண்டு மணித்தியாலத்தில்) அவ்விடத்துக்கு (கம்பட்டா என்று அழைக்கப்படும்) போலீசார் மூவர் அவ்விடத்துக்கு வந்து , அம்மோதலுக்கு காரணமாக இருந்த சிலரை அழைத்து சென்றனர்.அதன் பின் நடைபெற்ற விடயங்கள் இன்னும் நமக்கு கிடைக்கப்பெற வில்லை.

Tuesday, January 26, 2010

மாராவா வீதி புனர் நிர்மாணம்

மிக நீண்ட காலமாக பழுதடைந்திருந்த மாராவா வீதி
சில தினங்களுக்கு முன்னாள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதனால் மாராவா மக்கள் மிக நீண்ட காலம் அனுபவித்து வந்த துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கொலும்பு -கண்டி புதிய வீதியில் இருந்து முருதவலை வரையும் , தக்கிய வீதியில் இருந்து வ்ல்பதெனிய் வீதியும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. அதே வேலை மாராவா புலியம்மர சந்தியில் இருந்து மகவத்த வரையும் வீதிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை காலமும் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு மிக சிரமாமாக இருந்த வீதிகள் தற்போது கொன்கிரீட் இடப்பட்டுள்ளது.

http://i46.tinypic.com/szzu3o.jpghttp://i47.tinypic.com/2pzzmfs.jpg

Monday, January 25, 2010

About us

இந்த website இட்கு வந்த அனைவரையும் வரவெட்கின்றோம். ஒரு அழகான சூழ்நிலையில் அமைந்திருக்கும் எமது ஊர் மாவனல்லை. இதில் அன்றாட நிலவறங்களை எமாதூர் மற்றும் பிறர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுவததட்கும் ஆவல் கொள்ளுகின்றோம். எனவே மாவனல்லையன் பல பகுதிகளிலிருந்தும் மாறாவ, கிருங்கதெனிய, மஹவத்த, பூடாவ, ஹிங்குள பெலிகமான மற்றும் இன்னோரன்ன பகுதிகளிலிருந்தும் செய்திகளை உடனுக்குக்குடன் இந்த website இன் மூலம் உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்க எமது செய்திக்குளு மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

யாருடைய சொந்தக்காரியங்களையும் நாம் இங்கு பிரசுரிக்க மாட்டோம். குறை பிடிப்பது எமது நோக்ககமல்ல! அவர்கள் பொதுவாக செய்யும் நல்ல விடயங்களை நாம் மக்களுக்கு தெரிவிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். மற்றும் போதுமக்களுக்கு அநியாயம் இழைக்கும் வகையில் கலவாறங்கள் மற்றும் இதர சம்பவங்களை நாம் பிரசுரிக்க தவறமாட்டோம்.

இப்படிக்கு
ஷேகு,
தலைவர்,
மாவனல்லை சிந்தனையாளர் சங்கம்.

Saturday, January 23, 2010

குப்பை தொட்டிக்கு முற்றுகை

Bootawa பகுதியில் உள்ள தக்கியாவில் Bulb, Tap, உண்டியல், இரும்பு துண்டுகள் போன்றவை திருட்டுக்குட்படுவது ஐ வேலை தொலுஹையை விட மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது இவ்வறிருக்கெ ஆண்மையில் நடைபெற்ற சம்பவம் ஊராரின் மானத்தை ஊர்க்காய் போட்டது போல இருந்தது.

ஊரிலுள்ள குப்பைகளை TC ஆள் இலகுவாக எடுத்து செல்வதட்கேற்றவாறு சமூக அன்பர்கள் ஒரு வழியை அமைத்திருந்தனர். இதனால் உளமகிழ்ந்த பிரதேசசபை அவ்விடத்தில் குப்பைக்கை போடுவதட்காக உலோகத்திழாளான ஒரு குப்பை வாளியை பொருத்ிவிட்டு சென்றனர். அதன் பின்பு தான் நடந்தது அந்த படு கேவலமான சம்பவம். என்னவென்றால், ஒரு சில தினங்களுக்கு முன் தக்கீயா கொல்லையினர் ஒன்று சேர்ந்து அந்த வாளியையும் திருடிவிட்டார்கள்!

இது முஸ்லிம் சமுதாயத்தை கேவலப்படுத்தும் ஒரு செயலாக உள்ளது. இது போன்ற திருடர்களை பிடித்து மற்றும் இவர்களின் திருட்துக்கான காரணங்களை அறிந்து அவர்களுக்கும் ஓர் அறிவை வழங்கி தக்க நடவடிக்கை எதுக்கும்படி சமுதாயத்தை வேண்டிக்கொள்ிறோம்.

நீங்களும் அனுப்பவில்லையா SMS?

மவனல்லையை சேர்ந்த அமான் என்பவர் சில மாதங்களுக்கு முன்னாள் ஷக்தி டீவீ இனால் நடத்தும் ஷக்தி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவரின் பாடல் திறமையின் மூலம் முன்இறுதிப்போட்டிக்கு தெரிவாகி உள்ளார். இறுதிப்போட்டிக்காக தெரிவாவத்ட்கு அதிகம்பேர் இருப்பதானால். மக்களின் அதிகப்படியான SMS வாகுகளின் மூலம் இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்ய முடியும். இவரின் இதுவரை வெற்றிக்கு மிகவும் உருதுணையாய் இருந்ததும் எங்கள் முஸ்லிம் சகோதரர்களின் ஸ்ம்ஸ் காளாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதிலும் அதிகமான வாக்குகளை பெண்களே வழங்கிியிருப்பார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லை.

இஸ்லாமிய மார்க்கம் இசை மற்றும் வீணான பாடல்களை ஹராம் ஆக்கியுள்ளது. இதனை எமது சகோதரர்கள் அறிந்தும் கூட பெரிதாக ஆழட்திக்கொள்வதில்லை. நீங்கள் ஒருவரை பாவம் செய்ய தூந்டுவதும் அத்ட்காக உதவி செய்வதும் அதன்மூலம் அவர் முன்நெடுக்கும் நடவடிக்கைகளில் எங்களுக்கும் பங்குகள் குவிந்துகொண்டே இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே சிந்தித்து செயல்படுமாறு வேண்டுகிறோம்.

Friday, January 22, 2010

வாக்குரிமை???

வாக்குரிமை?? ஏன்??
முஸ்லிம் நாம்............................
சிந்திக்க வேண்டிய தருணம். யாருக்கு நாம் SF or MR.
எவர் எமக்கு நல்லது செய்வார்??

முதலில் நாம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அல்லாஹ்வை கொண்டே எல்லாம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஆனால் தூரத்ிஷ்டம் எமது சமூகம் இலக்கை மறந்து செயல்படுகிறதை காணமுடிகிறது.
இவர் வந்தால் அதை செய்வார் அவர் வந்தால் இதை செய்வார், இவரால் மட்டுமே நல்லது செய்யமுடியும் என கலிமா சொன்னவர்கள் சொல்வதை கேட்கிறோம்.
ஒரு விஷயம் மனதில் இருக்கட்டும், அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது........

அல்லாஹவிடம் கேட்போம், முஸ்லிம்களை விரும்பக்கூடிய ,எமக்கு நன்மை செய்யக்கூடிய நிதியானவனை ஆட்சியில் அமர்த்தூவாயாக. (ஆமின்)

Thursday, January 21, 2010

நேற்று

மாவநல்ல பாதுரியா மத்திய கல்லூரியின் கணித பாட ஆசிரியை Mrs.MIHURUN NISA அவர்கள் காலமானார்கள். innalillahi wa'innaelaihi rajihoon.
" ஒவ்வோர் ஆன்மாவும் மரநத்தை சுவைத்தே ஆகவேண்டும்" (குர்ஆன்).
நேற்று மாலை 7 மணியளவில் இவருடைய ஜானசா கிரீங்கதேனிய ஜும்மா பள்ளிவாயல் மையாவடிிஎல் அடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ் அவருக்கு மேலான ஜன்னத்துள் ஃபிர்தவ்ஸ் ஐ வழங்குவானாக ஆமின்.