Friday, April 30, 2010

மாவனெல்லை நகர மத்தியில் கள்வர் கைவரிசை

சற்று முன் மாவனெல்லை பொலயில் ( சந்தையில் ) ஒரு பெண்ணின் தங்க மாலையை திருடி ஓட முயன்ற ஒருவரை அங்கு இருந்தவர்களினால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப் பட்டார்.

Tuesday, April 27, 2010

கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தார்

கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தார்
தெல்தோட்டை ஹைத் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மின்னல் நேரத்தில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்த இராணுவ வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெல்தோட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்போது கடும் காற்றும் வீசியது.
இவ்வேளையில், ஹைத் தோட்டத்தில் வீடொன்றிலிருந்த இராணுவ வீரரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
கடும் மின்னலின்போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இராணுவ வீரர் அவ்விடத்திலேயே கருகிப் பலியானார்.
வீட்டில் வேறு ஆட்கள் இருந்தபோதும் அவர்களுக்கு அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரது சடலம் பின்னர் தெல்தோட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதேநேரம்,கடும் மழையுடன் இங்கு பலத்த காற்றும் வீசியதால் பயன்தரு மரங்கள் உட்படபல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் அடியோடும் பெயர்க்கப்பட்டுள்ளன. வீடுகள் யாவும் சேதமடைந்துமுள்ளன.

thinakkural.com

Sunday, April 25, 2010

பள்ளிவாயலில் திருட்டு மோசடி

இன்று காலை கிருங்கதெனிய பள்ளிவாயலில் இருக்கும் ஹசரத் ஒருவரின் இன் பணம் ரூபா. 4800 கலவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பள்ளிவாயலின் வாலாவுக்குள் சென்று கலவெடுக்கக் கூடிய இந்த கள்வர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வாழியைக் காட்டுவானாக.

Thursday, April 22, 2010

ஹெம்மாதகம வீதியில் வாகன விபத்து

மாவனல்லை ஹெம்மாதகம வீதியில் Rainco குடை Factory அருகில் மூன்று வாகனங்கள் விபத்துக்குல்லாகியுள்ளது. இதில் ஒரு கார் ஒரு Three wheeler மற்றும் ஒரு Cab வண்டியும் விபத்துக்குள்லடங்கியுள்ளது. எவருக்கும் பலத்த காயம் ஏற்ப்படவில்லை என்று நமது நீரூபர் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 21, 2010

மார்க்கெட் அருகில் துப்பாக்கிச் சூடு

இன்று மாலை மார்க்கெட் அருகில் சுமார் 7.30 மணியளவில் இனம் தெரியாத சில நபர்களால் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த நபரின் பணம் மற்றும் மொபைல் Phoneஐ பறிக்க முட்பட்ட போது தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்துள்ள நபர் தட்போது மாவனல்லை பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்துள்ளார்.

Wednesday, April 14, 2010

திருட்டுத் தொல்லை

எமது ஊரில் அன்மைக்காலமாக திருட்துத் தொல்லை அதிகமாகி வருகின்றது. எமது சமூகத்தில் வாழும் சில வசதிபடைத்த சகோதரர்களின் வீடுகளில் அண்மையில் தொடர்ந்து திருத்து சம்பவங்கள் நடைபெற்றன. எந்தலவுக்கென்றால், பஹல் நேரத்திலும் கூட திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என அறியப்படுகின்றது.

இந்த திருடர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவ்வறீருக்க இந்த திருட்டுக்கழுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஊரிலுள்ள வீடுகளையும் நிலைமைகளையும் நான்கு அறிந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம்.

இந்த திருடர்களை மிக விரைவில் அடையாளம் கண்டு, அவர்களௌஉக்கு தக்க தண்டனையை கொடுத்து. எமது ஊரில் திருட்டு எனும் கேவலமான ஒரு விஷயத்தை ஒழிப்பதட்கு நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு தனி நபர் மீதும் சமூக தலைவர்கள்மீதும் பொறுப்பாகும்.

Monday, April 12, 2010

மரண அறிவித்தல்

பெலிகமநயை சேர்ந்த ஷாஹுல் ஹமீத் என்பவர் நேற்று மாலை 3.00 மணியளவில் தூக்குக்கயிறை மாட்டி இரந்துள்ளார். நேற்று இரவு அடக்கம் செய்வதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கான காரணம் அறியப்படவில்லை.

புது இணையத்தளம்

மாவனல்லை கிருந்கதெநிய KYCஇன் இணையத்தளம் வெகு விரைவில் publish செய்யப்படும்.