
கடந்த நவம்பர் மாதம் மாவனல்லை தெல்கஹகொட என்ற பிரதேசத்தில் ஒரு வியக்கத்தக்க கொலை சம்பவம் நடந்ததை அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு தேடலை நமது செய்தியாளர்கள் திறட்டிய போது கிடைக்கப்பற்ற சில நம்பத்தக்க தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
குறித்த அந்த மாணவி மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியில் கல்விகற்ற ஒரு மாணவி ஆவார். இவர் 2011 ம் ஆண்டு க.போ.த. (உ /த) பரீட்சைக்கு தோற்றி பெருபருக்காக காத்திருக்கும் ஒரு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் தாயார் ஒரு ஆசிரியை ஆவார் . அன்றைய தினம் இவரின் தாய் வீடு திரும்பிய போது வீடு வழமை போல் வீடு மூடப்பட்டு இருந்தது மிகநீண்ட நேரம் கதவை தட்டிய போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை . அப்போது தன்னோடு பாடசாலை விட்டு வீடு திரும்பி இருந்த மகனை வீட்டினுள் அனுப்பி கதவை திறந்த பின்னர் தாயார் சமையலறைக்கு சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டிருப்பதை அவதானித்த தாயார் அதிர்ச்சியில் சத்தமிட பக்கத்திலுள்ளவர்களும் அவ்விடத்தில் கூடிவிட்டார்கள்.
இச்சம்பவம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக அவ்விடம் வருகை தந்த போலீசார் பலவிடயங்கள் குறித்து அவ்விடத்தில் விசாரணைகளை நடத்தினார்கள். அதன்போது அவரின் தந்தை அவருக்கு கடுமையாக தண்டிப்பதகவும் அடிப்பதாகவும் தெரியவந்தது . இவ்வாறான பல மன அழுத்தங்கள் காரணமாக விரக்தியுற்ற இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பலராலும் சந்தேகிக்கப்படுகிறது . ( ஊகங்கள் உண்மை அல்ல ) அதே வேலை குறித்த சம்பவத்திற்கு முந்திய தினம் அதே பிரதசத்தில் இதே போன்று ஒருவர் தற்கொலை செய்துகொடதும் கவனிக்கத்தக்கது .
இது ஒரு புறம் இருக்க போலீசார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் இவர் தூக்கிளிடப்படமுன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு இரண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது . இதுவரை வழங்கப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் நமது செய்தியாளர்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே இந்த ஆக்கம் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது . இது குறித்த தகவல்களை திறத்தும் பணியில் நமது செய்தியாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள் . இது குறித்த உண்மை விரைவில் இவ்விணையதளத்தில் வெளியிடப்படும் .
தொடர்ந்தும் நம்மோடு இருக்கும்படி வாசகர் மனம் வென்ற www.mawanella.tk கேட்டுக்கொள்கிறது. நன்றி