Saturday, May 29, 2010

காதி கோர்ட் அருகில் வெட்டு குத்து

இன்று காலை ஹிங்குள பள்ளிவாயல் காதி கோர்ட் இல் ஓர் விவாகரத்து சம்பவத்தில் தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு சார்பாக அமைந்ததால். மற்றைய தரப்பினர் அவர்கள்மீது தாக்க முயன்ற வேளையில் இருவர் மீது வெட்டுக்காயம் ஏட்பட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் தகவல்களை அறிய இந்தத் தளத்தில் எதிர்பார்க்கவும்.

இந்த சம்பவத்துக்குப் பின்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின்வருமாறு.

3 comments:

  1. காதி நீதிபதின் கறுத்து.............
    2010.05.29 ம் திகதி T326 என்ற வழக்கு மூன்றாவது தவனையாக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வாதி பிரதிவாதி தரப்பினரின் ஏகமனதான தீர்மாத்திற்கிணங்கவும் குறிப்பிட்ட தினமே விவாகரத்தை அனுமதிக்குமாறு இருசாராரும் வற்புறுத்தியதற்கிணங்கவும் தலாக் கூறுவதற்கு அனுமதிக்கப்பட்டது வாதி தலாக் கூற பிரதிவாதியும் ஏற்று கையொப்பமிப்பட்டார். சாட்சிகளாக பெண்ணின் உறவினர்கள் இருவரே கையொப்பமிப்பட்டனர்.

    எனவே மேற்படி தீர்ப்பு பக்கசார்பற்றது. காதி நீதிபதியிடம் இருசாராரும் இறுதியில் ஏகமனதாக வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுக்கொண்ட தீர்ப்பாகும். ஆகவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் நீதிமன்ற எல்லையைத் தாண்டிச்சென்றபின் நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

    மேற்படி தீர்ப்பு பக்கசார்பானது என நிரூபிக்கப்பட்டால் அல்லாஹ்வின் மீது ஆணையாக உடன் நீதிபதி பதவிலிருந்து விலகிக் கொள்வேன் என உறுதி கூறுகின்றேன்.

    அவ்வாறு நிரூபிக்கத்தவறும் வதந்தி பரப்பியோர யாவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிக்கோரி தத்தமது ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

    அல்லாஹ் போதுமானவன்........

    இப்படிக்கு,
    Moulavi A.L.A.M Fausz
    காதி நீதிபதி - மாவனல்லை.

    ReplyDelete
  2. வதந்தி பரப்பியோர யார்??????????

    ReplyDelete