Sunday, February 14, 2010

உள்ளத்தை கவர்ந்த சினிமா

புது படம் வந்துவிட்டால் தியேடர்இலே முதல் டிக்கெட் வாங்குவது எமது சமூகம். அண்மையில் ஒரு பாடசாலை சிறுவன் வளமைக்கு மாறாக படித்துகொண்டிருக்கும் வேளையிலே திடீரென மயங்கி விழுகின்றான், அளழ்ந்த உறக்கத்திட்கு அமைந்து விடுவான். மேலும் எவராலும் பர்றித்து சிரித்தால் தன்னை யாரோ கொலைசெய்ய வருவது போன்று நினைத்து மயங்கி விழுகின்ற சம்பவம் என அந்த சிறுவனுக்கு உள அளவில் ஒரு தாக்கம் ஏட்பட்டிருக்கின்றது.

இதை பல வைத்தியர்களிடம் சென்று இந்த தாக்கததுகான காரணம் என்ன என்பதை கண்டறிய பல பரிசோதனைகள் நாடத்தப்பட்டு கடைசியில் தெரியவந்தது இந்த தாக்கத்துக்கான காரணம் ஒரு திரைப்படம் என்று. அருந்ததி என்ற ஓர் கோர திரைப்படம். அதில் வரும் பயங்கர காட்சிகள் இந்த சிறுவனின் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றது. எனவே எந்த ஒரு நடவடிக்கைகளும் அந்த ஆழமான பதிவின் காரணமாக செயலிழந்து மயக்க நிலை ஏற்படுகின்றது. மருத்துவர்கள் மிகவும் சிரமத்துடன் இச்சிறுவனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறுவனால் அதிகம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலைமை. கவலைக்குரிய விடயம் தான். சமூகம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்!

No comments:

Post a Comment